Begin typing your search above and press return to search.
குடியரசு தினத்தில் ஆர்பாட்டக்காரர்களின் வன்முறை தொடர்பாக 22 FIR பதிவு!
குடியரசு தினத்தில் ஆர்பாட்டக்காரர்களின் வன்முறை தொடர்பாக 22 FIR பதிவு!

By :
நேற்று குடியரசு தினத்தில் டெல்லி மற்றும் சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் டிராக்டர் பேரணி என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைத் தொடர்ந்து தற்போது அந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை இதுவரை 22 FIR பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வன்முறை தொடர்பாக உடனடி மற்றும் வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் முதல் 15 FIR காலை 8 மணியளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களின் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக 15 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஐந்து FIR கிழக்குப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று காலையில் வெளியிடப்பட்ட சட்ட அமலாக்கத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 FIRs have been registered in connection with the violence during farmers' tractor rally yesterday: Delhi Police
— ANI (@ANI) January 27, 2021
இந்த வன்முறையின் விளைவாகப் பல ரயில் நிலையங்களில் மெட்ரோ சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி எல்லைப் பகுதிகளான காஜிப்பூர், டிகிரி, சிங்கு, நங்கோய், முகர்ப சவுக் போன்ற பகுதிகளில் இணையச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து பகுதிகளிலே விவசாய ஆர்ப்பாட்டக்காரர்கள் டிராக்டர் வன்முறை மற்றும் ஜனவரி 26 இல் ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னர் வசித்து வந்தனர்.

மேலும் நகரத்தில் ஒழுங்கு நடவடிக்கையைக் கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார். ITO மற்றும் செங்கோட்டை உள்ள பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இதுதவிர செங்கோட்டையில் நிஷான் சாஹிப் கொடியையும் ஏற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் வன்முறையைத் தடுக்க சென்ற காவல் துறையினர்களின் 83 காவல் துறையினர் காயமடைந்துள்ளனர்.
Next Story