Kathir News
Begin typing your search above and press return to search.

ஜாமியா மில்லியாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 23 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்!

ஜாமியா மில்லியாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 23 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்!

ஜாமியா மில்லியாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 23 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்!

Saffron MomBy : Saffron Mom

  |  12 Jan 2021 7:00 AM GMT

ஜாமியா மில்லா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் ஈடுபட்டுள்ளது. அது வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த 23 துப்புரவுத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஜாமியாவை சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர் ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடீயோவை வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் 23 துப்புரவுத் தொழிலாளர்கள் அவர்களது பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகள் 132 தொழிலாளர்களில் 23 பேரை நீக்குமாறு மனிதவள அமைச்சகம் உத்தரவு பிறப்பித்ததாகக் கூறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். "வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த 23 துப்புரவுத் தொழிலாளர்கள் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த 15 முதல் 20 வருடமாக வேலை செய்து வருகின்றனர்.

நிறுவனத்தில் கொரோனா காலகட்டத்தின் கடினமாக வேலை செய்து வந்தோம். நாங்கள் சாக்கடைகளையும் சரிசெய்து வந்தோம். ஆனால் வேலை நீக்கம் செய்ய நேரும் போது எங்களையே முதலில் பணிநீக்கம் செய்துள்ளனர்.

இந்த பல்கலைக்கழகத்தின் பாகுபாட்டினை நாங்கள் எதிர்க்கிறோம். ஜாமியாவின் நடவடிக்கை குறித்து நாங்கள் வருத்தமடைகிறோம்," என்று ராஜேஷ் குறிப்பிட்டுப் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் மிகுதியானோர் 10 மற்றும் 12 வகுப்பையே முடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் கழிவு நீரைச் சுத்தம் செய்யும் வேலையே வழங்கப்படுகின்றது. மேலும் 16 ஆண்கள் பியூன்களாக வேலை செய்கின்றனர்.

மேலும் சிலர் மலேரியாவைத் தடுக்கும் ஊழியர்களாகப் பணி புரிகின்றனர். ஆனால் அவர்களுக்கு வழிகாட்டுதலின் படி மூன்று மாதங்கள் மட்டுமே வேலை உண்டு என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

"நாங்கள் தினசரி தொழிலாளர்கள். எங்களுக்குக் கடந்த மூன்று நான்கு மாதங்களாகச் சம்பளம் வழங்கவில்லை. எங்களில் பலபேர் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கக் கூட பணம் இல்லை. இதுதான் ஜாமியாவில் பணிபுரிபவரின் நிலை," என்று ராஜேஷ் மேலும் ராஜேஷ் தெரிவித்தார்.

'With Inputs From Organiser'

Next Story
கதிர் தொகுப்பு
Trending News