Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் ஸ்வநிதி திட்டம் : 25 லட்சம் விண்ணப்பதாரர்களில் 12.59 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டது.!

பிரதமர் ஸ்வநிதி திட்டம் : 25 லட்சம் விண்ணப்பதாரர்களில் 12.59 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டது.!

பிரதமர் ஸ்வநிதி திட்டம் : 25 லட்சம் விண்ணப்பதாரர்களில் 12.59 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டது.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Oct 2020 2:51 PM IST

பிரதமர் ஸ்வநிதி திட்டம் எனப்படும் பிரதமர் நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டம், கொரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10,000 வீதம் கடனுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 12.59 லட்சம் வியாபாரிகளுக்கு ரூ. 10,000 விதம் கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்வநிதி திட்டத்தின் கீழ், நகர்ப்புற நடைபாதை வியாபாரிகள் தொழில் முதலீட்டு கடனாக ரூ.10,000 பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர். இந்தக் கடனை ஓராண்டில் மாதாந்திர தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டும். இக்கடனுக்கு வணிக வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழு வங்கிகள் ஆகியவை எவ்வித உத்தரவாதத்தையும் கேட்பதில்லை. உரிய காலத்தில் திருப்பி செலுத்தப்படும் நிகழ்வில், மேலும் அடுத்த சுற்று கடனும் வழங்கப்பட்டு சலுகை நீட்டிப்பு அளிக்கப்படும்.


உரிய காலத்திற்கு முன்னதாக கடனைத் திருப்பிச் செலுத்துவோரிடம் எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது. இத்திட்டத்தின் கீழ், கடனுதவி பெறுவோர் 7 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கு தகுதி பெறுவர். வீதி வியாபாரிகள் இச்சலுகையைப் பெறுவதற்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும், ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31, மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். டிஜிடல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரையிலான மாதாந்திர கேஷ்பேக் சலுகையையும் பெறலாம்.

டன் விண்ணப்பங்களை நேரடியாக, மாநாகராட்சி அலுவலகங்கள், மகளிர் திட்டம் மூலமாகவோ அல்லது www.pmsvanidhi.mohua.gov.in வலைதளம் மூலமோ அளிக்கலாம். 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட நடைபாதை வியாபாரிகள் இதற்கான பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும்.

தீபாவளி சமயத்தில் இந்த கடனுதவி சரியான பயனை அளித்துள்ளதாக நடைபாதை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் வெளியில் வந்து, குறிப்பாக பண்டிகை சமயங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதால், தங்களுக்கு பயன் அளிப்பதாக உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். பிரதமர் ஸ்வநிதி திட்டம், வீதி வியாபாரிகள் தங்கள் விற்பனை பொருட்களை வாங்க உதவியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News