தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது ! மத்திய அமைச்சர் தகவல் !
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். அதில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது.
By : Thangavelu
தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். அதில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் அரியலூர், கோவை, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மத்திய அமைச்சர் கூறிய பட்டியலில் உள்ளது. இதனை மத்திய உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற மத்திய அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
Source: Puthiyathalamurai
Image Courtesy: Dna
https://www.puthiyathalaimurai.com/newsview/112469/The-Central-Government-has-informed-the-Parliament-that-27-districts-in-Tamil-Nadu-are-lagging-behind-in-education