Kathir News
Begin typing your search above and press return to search.

"27 இந்து கோயில்களை இடித்து 'டெல்லி குதுப்மினார்' கட்டப்பட்டது, அக் கோயில்களை மீண்டும் எழுப்பி வழிபாடு நடத்த வேண்டும்" VHP வேண்டுகோள்!

27 இந்து கோயில்களை இடித்து டெல்லி குதுப்மினார் கட்டப்பட்டது, அக் கோயில்களை மீண்டும் எழுப்பி வழிபாடு நடத்த வேண்டும் VHP வேண்டுகோள்!

DhivakarBy : Dhivakar

  |  15 April 2022 12:33 PM GMT

"22 இந்து கோவில்களை இடித்துதான் டெல்லி குதுப்மினார் கட்டப்பட்டது, எனவே அக்கோயில்களை மீண்டும் புனரமைத்து, வழிபாடுகள் நடத்த வேண்டும்" என்று விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி கூறியுள்ளார்.


சமீபத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்க நிர்வாகிகள் பலர் டெல்லி குதுப்பினாரில் ஆய்வு நடத்தினர்.


இந்நிலையில், பத்திரிகையாளர் ஒருவருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய நிர்வாகி வினோத் பின்சார் அளித்த பேட்டியில் " நாங்கள் குதுப்மினாரில் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, இந்து தெய்வங்களின் நிலையைக் கண்டு பரிதவிப்புக்காளாகினோம். இருபத்தி ஏழு இந்து கோவில்களை இடித்து குதுப்மினார் எழுப்பப்பட்டது. எனவே அந்த இருபத்தி ஏழு இந்து கோவில்களையும் மீண்டும் புனரமைத்து, வழிபாடுகளை தொடர வேண்டும்" என்று அப்பேட்டியில் பேசியுள்ளார்.

இவரது இக்கருத்து, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலும் இந்து கோயிலை தகர்த்து கட்டப்பட்டதுதான் என்ற கூற்றும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


Thanthi Tv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News