Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்வு.. அமைச்சரவை ஒப்புதல்.!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்வு.. அமைச்சரவை ஒப்புதல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 July 2021 4:23 PM IST

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி முதல் 2021 ஜூலை 1ம் தேதி வரையில் மூன்று தவணைகளுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரண தொகை உயர்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 17 சதவீதத்தில் உள்ள அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தி வழங்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News