Begin typing your search above and press return to search.
தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து விலை ₹990!
தண்ணீரில் கலந்து குடிக்கும் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்தின் விலை ரூ.990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

By :
தண்ணீரில் கலந்து குடிக்கும் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்தின் விலை ரூ.990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு 2டிஜி தடுப்பு மருந்தை தண்ணீரில் கரைத்து கொடுத்தால், மூச்சு விடும் பிரச்சனை சரியாகும் என கூறப்பட்டுள்ளது. இதனை கடந்த மே 17ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்நிலையில், 2டிஜி கொரோனா தடுப்பு மருந்தின் ஒரு பாக்கெட் விலை ரூ.990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்று அந்த மருந்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
Next Story