2ம் கட்ட ரூபே அட்டை.. பூடானில் வெளியிட்ட இரு நாட்டு பிரதமர்கள் வெளியீடு.!
2ம் கட்ட ரூபே அட்டை.. பூடானில் வெளியிட்ட இரு நாட்டு பிரதமர்கள் வெளியீடு.!

By : Kathir Webdesk
பிரதமர் மோடியும், பூடான் பிரதமர் லோட்டாய் ஷெரிங்கும் சேர்ந்து, காணொலி வாயிலாக பூடானில் 2ம் கட்ட ரூபே அட்டையை பயன்பாட்டுக்கு வெளியிட்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த அட்டை இந்தியாவுக்கு வருகின்ற பூடான் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறினார். மேலும், இவை பூடான் தேசிய வங்கி வாயிலாக வெளியிடப்படும். இந்த ரூபே அட்டையால், ஒரு லட்சம் ரூபாய் வரை ஏடிஎம் மூலமாக பணம் எடுக்க முடியும். 20 லட்ச ரூபாய் வரை கொள்முதல் செய்ய முடியும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும், விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய, பூடான் ஒப்பந்தம் கையெழுத்தானதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி பல துறைகளில் இரு தரப்பு உறவுகள் மேம்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவை மிக துணிச்சலுடன் போராடி கட்டுப்படுத்தியவர் மோடி என பூடான் பிரதமர் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். இந்த ரூபே திட்டத்தால் மேலும் இரண்டு நாடுகளின் நட்பு வலுப்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
