Kathir News
Begin typing your search above and press return to search.

3 வருடம் சிறை.. கால்நடைகளைப் பாதுகாக்க புதிய சட்டம் : அசாம் முதல்வர் அதிரடி!

3 வருடம் சிறை.. கால்நடைகளைப் பாதுகாக்க புதிய சட்டம் : அசாம் முதல்வர் அதிரடி!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  13 July 2021 11:03 AM GMT

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க கட்சியை சேர்ந்த ஹிமாந்த பிஸ்வா சர்மா முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார். அசாம் மாநிலத்தின் உள்ள சட்டமன்றத்தில், கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில், இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் கால்நடைகளை கொல்வது மற்றும் மாட்டிறைச்சி விற்பனை செய்வது போன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த புதிய மசோதாவில், அசாம் கால்நடை பாதுகாப்பு மசோதா 2021-ன் கீழ் ஒரு கோயிலின் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கும் மற்றும் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும் மற்றும் அசாமிற்கு வெளியிலும் கால்நடைகளை கொண்டு செல்வது சட்டவிரோதமாகும் என அதில் கூறப்பட்டு உள்ளது.


இந்த புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாது. இந்த குற்றத்திற்கு 3 வருடம் சிறை தண்டனை அல்லது ரூ .3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும். மேலும் இந்த புதிய சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவர் இரண்டாவது முறையாக அதே குற்றத்தைச் செய்து குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவரது தண்டனை இரண்டு மடங்காக உயரும் என்று கூறியுள்ளனர்.

இந்த புதிய சட்டம் அசாம் மாநிலம் முழுவதும் அமல் படுத்தப்படுகிறது, மேலும் இதில் 'கால்நடைகள்' என்றால் காளைகள், மாடுகள், பசு, கன்றுகள், ஆண் மற்றும் பெண் எருமைகள் மற்றும் எருமை கன்றுகள் போன்ற கால்நடைகளுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News