3 அதியங்களை கொண்டது ஒரு ஓட்டு.....அழிவை கொண்டு செல்லும் காங்கிரஸ்! ம. பி' யில் பிரதமரின் உரை!
By : Sushmitha
தேர்தல் காலத்தில் இருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தின் சாத்னா இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் போடும் ஒரு ஓட்டு மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கும் காங்கிரஸ் ஆட்சியின் பிடியிலிருந்து மத்திய பிரதேசத்தில் நீக்கவும் உதவும். மூன்று அதிசயங்களை கொண்டது உங்களின் ஒரு ஓட்டு! நாட்டில் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது அதுமட்டுமின்றி இலவச ரேசன் பொருள்கள் ஏழை மக்கள் அனைவருக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கபடுவதாக நீடிக்கப்பட்டுள்ளது.
போலியான ஆவணங்களை கொடுத்து பயனாளர்களையும் அகற்றி உள்ளோம் இவர்கள் அனைவரும் காங்கிரஸ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவை. இவற்றை அனைத்தையும் கண்டறிந்து அகற்றிய காரணத்தினால் தான் காங்கிரஸ் என்னை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். ராமர் கோயில் குறித்து நான் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் பேசுகிறார்கள். இதனால் மகிழ்ச்சி அலை என்பது நாடு முழுவதும் வீசுகிறது. எதிர்காலம் இல்லாத மற்றும் எந்த ஒரு வளர்ச்சிக்கான திட்டமும் இல்லாத கட்சி என்றால் அது காங்கிரஸ் மட்டுமே! மேலும் செல்லும் இடம் எல்லாம் அது அழிவை கொண்டு செல்கிறது.
Source : Dinamalar