3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற இயலாது.. மத்திய அரசு கறார்..!
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற இயலாது.. மத்திய அரசு கறார்..!

By : Kathir Webdesk
டெல்லியில் கடந்த 2 வாரங்களாக பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை தவறாக கூறிவருகின்றது. இதனால் விவசாயிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் டெல்லியில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் மத்திய அரசு கூறியதை கேட்டுக்கொள்வதாக இல்லை. தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற இயலாது என்றும் சில திருத்தங்களுக்கு தயார் என்றும் மத்திய அரசு தகவல் கூறியுள்ளது. இதனால் அடுத்து கட்டம் குறித்து விவசாயிகள் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிகிறது.
