தேர்தல் அறிக்கையில் கூறியபடி வீட்டிற்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம்: கோவா பா.ஜ.க. அரசு அதிரடி!
By : Thangavelu
ஒவ்வொரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கோவா மாநில பாஜக அரசு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலைகளை நிர்ணயம் செய்து வருகிறது. சமீப காலமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் இந்தியாவிலும் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளியோர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் பல மானியங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது.
அதே போன்று தற்போது கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்த நிலையில், முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் குடும்பத்துக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கலாம் என கோவா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என பாஜக அறிவித்திருந்தது. அதனை முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அறிவிப்பு வெளியிட்டிருப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: Zee News