விதிகளை மீறி கிறிஸ்தவ மதத்தை போதித்த ஸ்விட்ன் நாட்டினர்: மிஷனரிகள் மீது நடவடிக்கை!
அசாம் மாநிலத்தில் உள்ள தேவாலயத்தில் விதிகளை மீறி கிறிஸ்துவ மதத்தை போதித்த சுட்ட நாட்டை சேர்ந்த மூன்று பேர் மீது நடவடிக்கை.
By : Bharathi Latha
நிபந்தனைகளை மீறி கிறிஸ்தவ மத போதனை:
அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள திப்ருகார் மாவட்டத்தில் விசா நிபந்தனைகளை மீறி கிறிஸ்தவ மதத்தை போதித்த குற்றச்சாட்டின் காரணமாக புதன்கிழமை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு 500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. விசா நிபந்தனைகளை மீறி கிறிஸ்தவ மதத்தைப் போதித்த குற்றச்சாட்டின் பேரில் 3 ஸ்வீடன் நாட்டினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
₹ 41,500 அபராதம்:
தலா 500 அமெரிக்க டாலர்கள் ₹ 41,500 அபராதமாக செலுத்திய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலீஸார் கூற்றுப்படி, "மூவரும் மார்கஸ் ஆர்னே ஹென்ரிக் ப்ளூம், ஹன்னா மைக்கேலா ப்ளூம் மற்றும் சுசானா எலிசபெத் ஹகனாசன் என அடையாளம் காணப்பட்டனர். அக்டோபர் 19ஆம் தேதி இந்தியா வந்த அவர்கள், அக்டோபர் 24ஆம் தேதி அஸ்ஸாம் சென்றடைந்தனர். அவர்கள் மிஷனரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், நம்ரூப்பில் உள்ள ஒரு தேவாலயத்தில் பிரசங்கம் செய்வதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு:
தகவலின் அடிப்படையில், நாங்கள் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை சேகரித்து, குற்றச்சாட்டு உண்மை என்று கண்டறிந்தோம்" என்று திப்ருகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வேதாங்க் மிஸ்ரா கூறினார். அவர்கள் சுற்றுலா விசாவில் வந்ததால், அது விசா விதிமுறைகளை மீறுவதாகும். அவர்கள் வெளிநாட்டினர் சட்டத்தின் 14வது பிரிவை மீறியதும் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில், அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.
Input & Image courtesy: Hindustantimes