Kathir News
Begin typing your search above and press return to search.

டிசம்பருக்குள் 30 கோடி தடுப்பூசி - சீரம் நிறுவனம் திட்டம்.!

டிசம்பருக்குள் 30 கோடி தடுப்பூசி - சீரம் நிறுவனம் திட்டம்.!

டிசம்பருக்குள் 30 கோடி தடுப்பூசி - சீரம் நிறுவனம் திட்டம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2020 12:07 AM IST

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உருவாகிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்து வருகின்றன.

ஐம்பதிற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சோதனையில் உள்ளன. ரஷ்யா தனது தடுப்பு மருந்தை அங்கீகரித்து மக்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவிலும் தடுப்பு மருந்து சோதனையில் உள்ளது.

டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அனுமதி அளித்ததும் வெளியீடு தொடங்கிவிடும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்க சீரம் மருந்து நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News