Kathir News
Begin typing your search above and press return to search.

தொலைக்காட்சி சேனல்களில் தேசிய நலன் சார்ந்து 30 நிமிட நிகழ்ச்சி - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தொலைக்காட்சி சேனல்களில் தேசிய நலன் சார்ந்து 30 நிமிட நிகழ்ச்சி - மத்திய அரசு அதிரடி உத்தரவு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2022 9:16 AM IST

சமூக விழிப்புணர்வு

புதிய சட்டத்திருத்தங்களின்படி இந்தியாவில் ஒளிபரப்ப விரும்பும் சேனல்கள் இனி அன்றாடம் 30 நிமிடங்களாவது தேசிய முக்கியத்துவம், சமூக பிரச்சினைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும். இது பொழுதுபோக்கு சேனல்களுக்கும் பொருந்தும்.

விளையாட்டு சேனல்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் சேனல்கள் நேரத்தை தேர்வு செய்து அதற்கேற்ப நிகழ்ச்சியை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தம்

தொலைக்காட்சி சேனல்களை அப்லிங்க், டவுன்லிங்க் செய்வதற்கான 2022ம் ஆண்டுகான வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பூட்டான், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாள நாட்டு சேனல்கள் இனி இந்தியாவிலிருந்து அப்லிங்க் செய்யலாம். இதுவரை சிங்கப்பூரில் இருந்து அப்லிங் செய்து கொண்டிருந்தன.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் கருத்து

அன்றாடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக 30 நிமிட நிகழ்ச்சியாவது தனியார் டிவி சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அபூர்வ சந்திரா கூறினார். அரசின் புதிய மாற்றம் மூலம் இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி கிடைப்பது அதிகரிக்கும்.

Input From: Business Standard

Next Story
கதிர் தொகுப்பு
Trending News