Begin typing your search above and press return to search.
30 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு நடவடிக்கை.!
30 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு நடவடிக்கை.!

By : Kathir Webdesk
நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிப் பேருக்கு இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கையை தற்போது மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் எல்லாம் கதிகலங்க வைக்கின்ற இந்த வைரஸை தடுத்து நிறுத்துவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றை மக்களுக்கு போட்டு பரிசோதிக்கும் பரிசோதனைகள் தற்போது நடந்து வருகின்றன.
அந்த வகையில் நமது நாட்டிலும் இந்த மருத்துவ பரிசோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசிகளை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து, மத்திய அரசே நேரடியாக அவற்றை வாங்கி, அவற்றின் முன்னுரிமை குழுக்களுக்கு இலவசமாக கொடுக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
இதுபற்றி டெல்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் வெளியிட்டுள்ள ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால், ஒரு தடுப்பூசி போடுவதற்காக "சிறப்பு தடுப்பூசி திட்டத்தை" மத்திய அரசு செயல்படுத்தும் மற்றும் தடுப்பூசி தயாரானவுடன் மத்திய அரசு அதை நேரடியாக கொள்முதல் செய்யும். கொள்முதல் செய்வதற்கான தனி பாதைகளை மாநிலங்கள் வகுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிப் பேருக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதற்காக பயனாளிகளை அடையாளம் காணும் செயல்முறையை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உதவியுடன் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
ஆரம்பக் கட்டத்தில் நான்கு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அவர்கள் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள் ஒரு கோடி பேர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், போலீசார்கள், ஆயுதப் படையினரின் 2 கோடிப்பேர், 50 வயதிற்கு மேற்பட்டோர் 26 கோடி பேர், நாள்பட்ட வியாதிகள் கொண்டுள்ள 50 வயதிற்கு உட்பட்ட சிறப்புக் குழுவினர் மற்றும் சிறப்பு கண்காணிப்பு தேவைப்படும் சுமார் ஒரு கோடி பேர் ஆவார்கள். எனவே இந்த முன்னுரிமை குழுவினரை அடையாளம் கண்டு அடுத்தமாதம் இறுதிக்குள் அவர்களின் பெயர்களை பட்டியலிடுமாறு, மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இவர்களுடன் அனைவரின் ஆதார் அட்டைகள் இணைக்கப்படும் மற்றும் தடுப்பூசி போடுகின்ற பணியாளர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
Next Story
