Kathir News
Begin typing your search above and press return to search.

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலை இடித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலை இடித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!
X

DhivakarBy : Dhivakar

  |  24 April 2022 9:15 AM GMT

ராஜஸ்தான்: 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


கடந்த ஒரு வருட காலமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்து கோவில் இடிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இச்சம்பவங்கள் இந்து மக்களிடையே மன வேதனையை ஏற்படுத்தி வருகிறது.


இதன் வரிசையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில அல்வார் மாவட்டத்தில், ஏப்ரல் 22ஆம் தேதியன்று, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. இடிக்கப்படும் சிவன் கோயிலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இச்சம்பவம் குறித்து பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறுகையில் : காங்கிரஸ் அரசு வளர்ச்சி பணி எனக்கூறிக் கொண்டு, 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை இடித்துள்ளனர். 300 ஆண்டுகள் பழமையான கோவில் இடிக்கப்பட்டிருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது''.

சிவன் கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இந்த கோயில் இடிப்பு தொடர்பாக, உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜோஹரி லால் மீனாவி மீது 2 புகார்கள் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.

OPindia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News