"எங்களுக்கு இந்தியா மாதிரி ஒரு நாடு வேண்டும்" - இந்திய குடியுரிமை வேண்டி வந்த 8,244 விண்ணப்பங்கள்!
3,117 religious minorities from Pakistan, Bangladesh and Afghanistan granted citizenship in the past four years
By : Muruganandham
பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தம் 3117 மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது . நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் புதன்கிழமை (டிசம்பர் 22) இதைத் தெரிவித்தார்.
இந்திய குடியுரிமைக்காக இந்த நாடுகளில் உள்ள மத சிறுபான்மையினரிடம் இருந்து 8,244 விண்ணப்பங்கள் உள்துறைக்கு வந்துள்ளதாக அமைச்சர் ராய் தெரிவித்தார்.
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்து, சீக்கியர், ஜெயின் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரிடமிருந்து பெறப்பட்ட மொத்த குடியுரிமை விண்ணப்பங்களின் விவரங்களைக் கோரிய, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த டாக்டர் கே கேஷவ ராவ் எழுப்பிய கேள்விக்கு ராய் பதிலளித்தார்.
மற்றொரு எம்பி அப்துல் வஹாப் இந்திய குடியுரிமை வழங்கிய மொத்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார் . 2016 மற்றும் 2020 க்கு இடையில், 4,177 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதாக ராய் சபையில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியக் குடியுரிமைக்கான 10,635 விண்ணப்பங்கள் அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ளன, அவற்றில் 70 சதவிகிதம் (7,306) பாக்கிஸ்தானின் கோரிக்கைகள் என்று ராய் கூறினார் . ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் (161), இலங்கை மற்றும் அமெரிக்கா (223), நேபாளம் (189) மற்றும் 10 சீன பிரஜைகள் என 1,152 பேர் இந்திய குடியுரிமை கோரியுள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 428 நாடற்றவர்களும் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.