Kathir News
Begin typing your search above and press return to search.

உ பி: 31,277 உதவி ஆசிரியர்களுக்குப் பணி நியமன கடிதங்களை வழங்கினார் முதல்வர் யோகி.!

உ பி: 31,277 உதவி ஆசிரியர்களுக்குப் பணி நியமன கடிதங்களை வழங்கினார் முதல்வர் யோகி.!

உ பி: 31,277 உதவி ஆசிரியர்களுக்குப் பணி நியமன கடிதங்களை வழங்கினார் முதல்வர் யோகி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2020 11:55 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கல்வித் துறையில் வேலைவாய்ப்பிற்காகக் கொண்டுவரும் ஒரு பெரிய முன்னேற்றமாக வெள்ளிக்கிழமை அன்று 31,277 பேருக்கு உதவி ஆசிரியர் பணிக்கான நியமன கடிதத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார்.

2019 இல் உத்தரப் பிரதேச கல்வி வாரியம்(UPEB) மூலம் 69,000 காலியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு இந்த பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு இந்த கடிதம் இணையம் மூலம் யோகி ஆதித்யநாத் வழங்கினார்.

நியமன கடிதத்தை வழங்கிய பிறகு, "எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டங்கள் அனைத்திலும் பங்குபெற்றுவிட்டீர்கள், தற்போது நீங்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் உங்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்றது," என்று உதவி ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களிடம் முதல்வர் வலியுறுத்தினார். வெற்றிகளைப் பெறக் கடின உழைப்பைத் தவிர வேறு குறுக்கு வழிகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பல தடைகளைச் சந்தித்து 69,000 காலிப்பணியிடங்களை நிரப்பும் முயற்சியை இந்த அரசு தான் செய்தது என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து மீதமுள்ள பணியிடங்களுக்கான நியமனமும் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்த அறிக்கையின் படி, 2015-18 வரை மொத்தம் 5,948 ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இது 2019-2020 கல்வியாண்டில் உயர்ந்து 46,319 ஆசியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், இதுவரை மாநில அரசாங்கத்தால் மொத்தம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் 83,544 பேர் ஆவர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News