மீனவர் நலனுக்காக மோடி அரசு ஒதுக்கிய 32 ஆயிரம் கோடி - எல்,முருகன் கூறிய அசத்தல் தகவல்
மீனவர் நலனுக்காக மொத்தம் 32 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
மீனவர் நலனுக்காக மொத்தம் 32 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்தமான், நிக்கோபார் தீவு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு மத்திய மின்வளத்துறை இணைய அமைச்சர் எல்.முருகன் அந்தமான் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது, 'நாட்டில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரதமரின் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மீன்வளம், மீன் பிடித்தளம் மற்றும் மீன்பிடி இறங்குதளம், துறைமுக மேம்பாடு, ஆழ்கடல் மீன்பிடி மேம்பாடு போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீல புரட்சி திட்டத்திற்கு 5,000 கோடி துறைமுகங்களை மேம்படுத்த 7,000 கோடி பிரதமரின் திட்டத்திற்கு 20,000 கோடி என மொத்தம் 32 ஆயிரம் கோடி நிதி மீனவர்களின் நிலனுக்காக மோடி அரசு ஒதுக்கி உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.