37 கோடி தடுப்பூசி மாநிலங்களுக்கு வினியோகம்: மத்திய சுகாதாரத் துறை தகவல்!

By : Bharathi Latha
இந்தியாவில் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏனென்றால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்ற சூழ்நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்தும் போது தான் ஒரே தீர்வு என்பதை தற்பொழுது புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக தடுப்பூசிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன்காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசிகள் கையிருப்பு களுக்கு ஏற்றவாறு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 37.07 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 37.07 கோடி டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் 23,80,000 டோஸ்கள் வழங்கப்பட உள்ளது.
தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 1.66 கோடி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. எனவே மத்திய அரசின் நோக்கம் என்னவென்றால், அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் மற்றும் இந்த நோய் தொற்றை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பது ஒரே நோக்கமாக இருந்து வருகிறது.
