Kathir News
Begin typing your search above and press return to search.

தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு 3-வது அலை அபாயம் ! - மாநில சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு 3-வது அலை அபாயம் ! - மாநில சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !
X

DhivakarBy : Dhivakar

  |  20 Oct 2021 6:48 PM IST

கொரோனாவின் இரண்டாம் அலை ஓய்ந்து வரும் நிலையில், தற்போது கொரோனா மூன்றாவது அலை குறித்து மகாராஷ்டிரா மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியது பேசு பொருளாகி இருக்கிறது.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியது:-

கொரோனா 2-வது அலை இன்னும் முடியவில்லை. தற்போது உள்ள நிலவரப்படி 3-வது அலை உருவாக சாதகமான சூழல் இல்லை. ஆனால் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு 3-வது அலை அபாயம் இருப்பதாக மாநில கொரோனா பணிக்குழு எச்சரித்து உள்ளது. எனவே சூழலை ஆய்வு செய்து வருகிறோம்.

மாநிலத்தில் 9 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது. 35 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டு உள்ளனர். மாநிலத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை. கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் சவாலான பணி மாநில நிர்வாகத்தின் முன் உள்ளது. கல்லூரி மாணவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போடவேண்டும். 1½ கோடி மக்கள் உள்ள மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கொரோனா உயிரிழப்பு கூட ஏற்படாதது மிகப்பெரிய சாதனையாகும்.

இவ்வாறு மகாராஷ்டிரா மாநில சுகாதார துறை அமைச்சர் கூறினார்.

Image : Hindustan Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News