ஒமைக்ரான் எதிரொலி: முன்கள பணியாளர்களுக்கு 3வது டோஸ், இந்திய மருத்துவ சங்கம் தகவல்!
தென்னாப்பிரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், விஞ்ஞானிகளும் சற்று கவலை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
By : Thangavelu
தென்னாப்பிரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், விஞ்ஞானிகளும் சற்று கவலை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் டெல்லியில் நேற்று (டிசம்பர் 6) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நாடு முழுவதும் கடந்த வாரத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று புதிய பரிணாமத்தால் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது போன்ற வகை வைரஸ் பரவுகின்றதில் டெல்டாவை விட கூடுதலாக இருப்பதால் அரசும், பொதுமக்களும் மிகவும் விழிப்புணர்வோடு இருந்து அதனை தடுப்பதற்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
மேலும், மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்றனர்கள் மற்றும் புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு 3வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Daily Thanthi
Image Courtesy:Dna India