இந்தியாவில் 4 கோடி பேர் ஒரு டோஸ் கூட தடுப்பூசி போடவில்லை!
By : Thangavelu
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பற்றி கேட்கப்பட் கேள்விக்கு மக்களவையில் சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்துள்ள பதிலில், ஜூலை 18ம் தேதி வரையில் அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. இது 97.34 சதவீதம் ஆகும்.
மேலும், 4 கோடி பேர் ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்திக்கொள்வில்லை. மார்ச் 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 18 வயது முதல் 59 வயதுடையவர்களுக்கு ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அனைவருமே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வசதியாக அரசு தடுப்பூசி மையங்களில் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Maalaimalar