Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த இரண்டு மாதங்களில் அத்துமீறி நுழைந்த 40 ரோஹிங்கியாக்கள் கைது!

கடந்த இரண்டு மாதங்களில் அத்துமீறி நுழைந்த 40 ரோஹிங்கியாக்கள் கைது!

கடந்த இரண்டு மாதங்களில் அத்துமீறி நுழைந்த 40 ரோஹிங்கியாக்கள் கைது!

Saffron MomBy : Saffron Mom

  |  15 Jan 2021 5:41 PM GMT

தற்போது புதிதாகக் கைது செய்யப்பட்ட 10 மியான்மார் ரோஹிங்கியாஸ் உட்பட இதுவரை கடந்த இரண்டு மாதங்களில் வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக நுழைந்த 45 மியான்மார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் ராஜதானி சிறப்பு ரயிலில் இருந்து புதன்கிழமை அன்று ஐந்து குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 10 ரோஹிங்கியாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக NFR யின் மக்கள் தொடர்பு அலுவலரின் முதன்மை தலைவர் சுபானன் சாந்தா தெரிவித்தார். அவர்கள் உடனடியாக மேற்கு வங்காள ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர்.

அவர்களுடன் நடந்த விசாரணையில் அவர்கள் ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றும் அவர்கள் திரிபுராவில் உள்ள அகர்தலா ரயில் நிலையத்தில் இருந்து ஏறினார்கள் என்று கூறியதாகச் சாந்தா தெரிவித்தார். "இவர்கள் பங்களாதேஷில் இருந்து ஜனவரி 10 இல் திரிபுரா ரயிலில் ஏறியுள்ளனர். மேலும் இவர்கள் பங்களாதேஷில் இருக்கும் குடுப்பலோங் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்," என்றும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஜல்புகிரி அரசு ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களில் RPF மற்றும் GRP துருப்புகள் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 35 ரோஹிங்கியாக்களை கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் அகதிகள் முகாமில் இருக்கும் ரோஹிங்கியாக்கள் தொடர்ச்சியாக இந்திய வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக நுழைந்து வேலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வருகின்றனர்.

ரோஹிங்கியா அகதிகள் பெரிய பிரச்சனையாக இருக்கின்றனர் மற்றும் அவர்கள் மியான்மாருக்குத் திரும்பவிட்டால் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்குப் பிரச்சனையாக இருக்கும் என்று BGB தலைவர் மாஜி ஜென் ஷாபீனுள் இஸ்லாம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவில் மட்டுமல்லாது தாய்லாந்து, இந்தோனேசிய மற்றும் மலேசியாவிலும் காணப்படுகின்றனர் என்று இஸ்லாம் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2017 இல் நடந்த துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறையைத் தொடர்ந்து மேற்கு மியான்மரில் 738,000 ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷில் முகாமில் அகதியாக உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News