வேலைவாய்ப்பில் முன்னேற்றம் : இஎஸ்ஐ திட்டத்தில் 4.17 கோடி புதிய தொழிலாளர்கள் சேர்ப்பு.!
வேலைவாய்ப்பில் முன்னேற்றம் : இஎஸ்ஐ திட்டத்தில் 4.17 கோடி புதிய தொழிலாளர்கள் சேர்ப்பு.!

கடந்த 3 ஆண்டுகளில் இஎஸ்ஐ திட்டத்தில் 4 கோடியே 17 லட்சத்து, ஆயிரத்து 134 புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த 2017 செப்டம்பர் முதல் 2020 ஆகஸ்ட் வரை நாட்டின் வேலை வாய்ப்பு நிலவரம் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை, தேர்வு செய்யப்பட்ட அரசு முகமைகளின் நிர்வாக ஆவணங்களில் இருந்து பெற்று, மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் தேசிய புள்ளியல் அலுவலகம்(என்எஸ்ஓ) வெளியிட்டுள்ளது.
இதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் ஆண்டு வாரியாக புதிதாக சேர்ந்த தொழிலாளர்கள், பாதியில் நின்றவர்கள், வேறு நிறுவனங்களில் சேர்ந்தவர்கள் வயது வாரியாக, பாலின வாரியாக உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் இஎஸ்ஐ திட்டத்தில் 4 கோடியே 17 லட்சத்து, ஆயிரத்து 134 புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதன் விரிவான அறிக்கை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.