Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டு ஆண்டுகளில் 419 புதிய இரயில்கள்! பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட அசத்தல் நடவடிக்கை!

இரண்டு ஆண்டுகளில் 419 புதிய இரயில்கள்! பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட அசத்தல் நடவடிக்கை!

இரண்டு ஆண்டுகளில் 419 புதிய இரயில்கள்! பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட அசத்தல் நடவடிக்கை!

Muruganandham MBy : Muruganandham M

  |  6 Feb 2021 8:18 AM GMT

கொரோனா பெருந்தொற்று காலத்தில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய இரயில்வே துறை பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. 2018-19-ஆம் ஆண்டு 266 புதிய ரயில்களும், 2019-20-ஆம் ஆண்டு 153 ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஹுமசஃபர், தேஜாஸ், அந்த்யோத்யா, உத்கிரிஷ்ட் இரட்டை அடுக்கு குளிர்பதன பயணிகள் சேவை உள்ளிட்டவற்றை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா பொது முடக்கத்தின் போது, 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 முதல் மே 31 வரை 53585 சரக்கு ரயில்களும், 3826 பார்சல் ரயில்களும் இயக்கப்பட்டன. 2020 ஆண் ஆண்டு மார்ச் 25 முதல் 2021 ஜனவரி 27 வரை 318142 சரக்கு ரயில்களும், 8899 பார்சல் ரயில்களும் இயக்கப்பட்டன.

பயணிகளின் பாதுகாப்பையும், வசதியையும் மேம்படுத்துவதற்காக ரயில்வே துறையால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய 63 ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 2,900-க்கும் அதிகமான பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வீடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 4621 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியது. இந்த சேவைக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அதுவும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படாமல், மாநில அரசுகள் அல்லது அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. பயணிகளுக்கு இலவசமாக 1.96 கோடி உணவையும் , 2.19 கோடி பாட்டில்கள் தண்ணீரையும் ரயில்வே வழங்கியது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக தனது அனைத்து பயணிகள் சேவைகளையும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் ரத்து செய்த ரயில்வே, அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி 2020 ஆம் ஆண்டு மே 1 முதல் படிப்படியாக சேவைகளை திரும்ப வழங்கி வருகிறது.

புதிய தடம், அகலப்பாதைக்கு மாற்றம் மற்றும் இரட்டிப்பு பணிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ 1,53,998 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக ரூ 30,798 என்னும் அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009-14 காலகட்டத்தில் ஆண்டு சராசரி ஒதுக்கீடு ரூ 11,527 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Introduction of New Trains

Next Story
கதிர் தொகுப்பு
Trending News