Kathir News
Begin typing your search above and press return to search.

2018 இல் இருந்து 460 நக்சல் தீவிரவாதிகள் கொலை மற்றும் 161 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு!

2018 இல் இருந்து 460 நக்சல் தீவிரவாதிகள் கொலை மற்றும் 161 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு!

2018 இல் இருந்து 460 நக்சல் தீவிரவாதிகள் கொலை மற்றும் 161 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு!

Saffron MomBy : Saffron Mom

  |  7 Jan 2021 9:43 AM GMT

நாட்டில் 2018 இல் இருந்து ஊடுருவிய மற்றும் நக்சல் தீவிரவாதத்தைச் சேர்ந்த 460 தீவிரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக RTI வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2018 இல் இருந்து இதுவரை 161 பாதுகாப்புப் படையினர் தங்கள் உயிர்களை இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இடதுசாரி தீவிரவாத(LWE) பிரிவு பதிலளித்துள்ளது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வரை 2018 மற்றும் 2020 வரை இறந்துள்ள பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை மற்றும் கொல்லப்பட்டுள்ள நக்சல் தீவிரவாதிகள் குறித்த கணக்கை நொய்டாவைச் சேர்ந்த வழக்கறிஞரும் மற்றும் RTI ஆர்வலருமான ரஞ்சன் தோமர் கோரியிருந்தார். சமீபத்தில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், நவம்பர் 2020 வரை நடந்த தாக்குதல் குறித்துப் பதிவு செய்துள்ளது.

அந்த அறிக்கையில், இதுவரை 460 இடதுசாரி தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார் மற்றும் 2018 முதல் 2020 வரை நக்சல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையேயான தாக்குதலில் 161 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். 2020 செப்டம்பரில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்ததில், நாட்டில் நக்சல் தீவிரவாத வன்முறை குறைந்துள்ளது மற்றும் 46 மாவட்டங்களில் மட்டுமே நக்சல் தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ளதாகத் தெரிவித்திருந்தது.

மேலும் 2019 இல் நடைபெற்ற தாக்குதல் குறித்து ஒப்பிடும் போது 2020 இல் ஆகஸ்ட் மாதம் வரை இறப்பு எண்ணிக்கை 137 இல் இருந்து 102 ஆகக் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சல் தீவிரவாதிகளின் ஒருங்கிணைந்த இறப்புகள் 2017 இல் 263, 2018 இல் 240, 2019 இல் 202 மற்றும் 2020 இல் 102 ஆகப் பதிவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உள்துறை அமைச்சகம் தனது இணையத்தில், 2004 மற்றும் 2019 வரை 8,197 பொதுமக்கள் நக்சல் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் பெரும்பாலான பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்ததன் பேரில் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News