5 கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் அவலம் - அதிர்ச்சி தகவல்!
மக்களிடம் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் இல்லாததால் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் நிலைமை.
By : Bharathi Latha
சீனாவில் தோன்றி உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்று இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தடுப்பூசி தான் பெரும் பங்கு வகித்தது. கொரோனாவிற்கு எதிராக உலகின் மாபெரும் தடுப்பூசி இயக்கம் கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி இந்தியாவில் தொடங்கியது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளான கோவிட் ஷீல்டு, கோவாக்ஸின் இதில் முக்கிய பங்கு வகித்தன.
சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் என அனைவருக்கும் பல தரப்புகளில் தடுப்பூசி போடப்படும் திட்டம் அறிமுகமானது. பெரும் பாலானோருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் சிறிது சிறிதாக மக்களிடம் நோய் தொற்று பற்றிய பயம் குறைய தொடங்கியது. இதன் காரணமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் 10 கோடி தடுப்பூசுகள் வீணாகி கொட்டி அழிக்க அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் இன்ஸ்டியூட் தலைமை செயல் அதிகாரி சமீபத்தில் செய்து ஒன்றே வெளியிட்டு இருந்தார். கோவாக்ஸின் தடுப்பூசிகளும் வீணாக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ஐந்து கோடி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் காலாவதியாகி உள்ளதாக தகவல்கள் வழியாக உள்ளது. இந்த தடுப்பூசி உற்பத்தியும் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News 18