Kathir News
Begin typing your search above and press return to search.

நாளை வாக்கு எண்ணிக்கை: 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை.!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறார்.

நாளை வாக்கு எண்ணிக்கை: 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 May 2021 1:39 PM IST

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலத்தில் நாளை வாக்கு எண்ணிகை நடைபெறும் நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதே போன்று மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதனிடையே தேர்தல் எண்ணிக்கை நாளை தொடங்க உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் அனைத்துவிதமான முன்னேற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறார்.




இந்த ஆலோசனையானது மிக முக்கியமாக கருதப்படுகிறது. நாளை எப்படி பணியாற்ற வேண்டும். கொரோனா தொற்று பரவும் நேரத்தில் முகவர்கள், வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News