ரூ50 லட்சம் நன்கொடை: இந்தியாவிற்கு ஆதரவாக, கொரோனாவிற்கு எதிராக கைகொடுக்கும் மற்றொரு நிறுவனம்!

By : Bharathi Latha
இந்தியாவில் கொரோனாவின் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது இதற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு பல தரப்பிலிருந்தும் உதவிகள் வந்துகொண்டே இருக்கின்றன குறிப்பாக கடந்த சில நாட்களாக அமெரிக்கா பிரிட்டன் போன்ற உலக நாடுகள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் பல்வேறு உதவிகளை புரிந்து உள்ளனர்.
அந்த வகையில், இந்திய சந்தையில் ஆடியோ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் ஒன்றான boAt, உயர்தர ஆக்ஸிஜன் சப்ளையர்களையும், மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய மருத்துவ பொருட்களையும் கொள்முதல் செய்வதற்காக ரூ.50 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளது.
டெல்லி முழுவதும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்குவதற்காக saveLIFE அறக்கட்டளையுடன் boAt நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறையால் மிகவும் கடுமையாக பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ள மருத்துவமனைகள் மற்றும் கோவிட் -பராமரிப்பு மையங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிக்க அடுத்த சில நாட்கள் சுகாதாரத் துறையுடன் நெருக்கமாக பணியாற்ற போவதாக boAt நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மிக வேகமாக பரவி வரும் தொற்றுநோயின் காரணமாக boAt நிறுவனம் தனது சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் ஒவ்வொரு நிறுவனமும் தன்னுடைய லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆகவே விளம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யப்படுகிறது. ஆகவே அந்த செலவுகளை தற்பொழுதும் குறைத்து அதில் வரும் தொகையை முழுவதுமே நோய்த் தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு பயன்படுத்த உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
