Kathir News
Begin typing your search above and press return to search.

யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் 50 குற்றவாளிகள் சரண்!

யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் 50 குற்றவாளிகள் சரண்!
X

ThangaveluBy : Thangavelu

  |  27 March 2022 11:14 AM GMT

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் சிறப்பாக ஆட்சி நடத்தியதால் குற்றங்கள் வெகுவாக குறைந்தது. அதே போன்று தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைத்த நிலையில் 15 நாட்களில் 50 குற்றவாளிகள் தாங்களாகவே சரணடைந்துள்ளனர். 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப்பை தவிர்த்த மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது. அதே போன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை பாஜக தலைமையிலான அரசு கொடுத்ததால் மீண்டும் அங்கு ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், கடந்த மார்ச் 10 அன்று மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்ததை அறிந்த குற்றவாளிகள் பலர் தாங்களாகவே போலீசில் சரணடைந்து வருகின்றனர். அப்படி சரணடையாமல் குற்றங்களுக்கு மேல் குற்றங்கள் செய்பவர்கள் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் உயிர் பிழைத்தால் போதும் தவறை உணர்ந்து இனிமேல் எந்த குற்றங்களிலும் ஈடுபட மாட்டேன் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்து பொது மன்னிப்பு வாங்குகின்றனர். சிலர் சிறைக்கு செல்கின்றனர்.

சமீபத்தில் ஒரு குற்றவாளி தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க முடியாமல் தவித்த போலீசார் அவரின் வீட்டை இடிப்பதற்கு புல்டோசர்களை எடுத்து சென்றதால் சிறிது நேரத்தில் குற்றவாளி சரணடைந்ததை நாம் அறிந்திருப்போம். அதே போன்று தற்போது உபியில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைந்து வருகின்றனர். இதுவரைக்கும் 15 நாட்களில் 50 குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர். இதன் எண்ணிக்கை மேலும் உயரும் எனறு அம்மாநில ஏ.டி.ஜி.பி அசோக்குமார் கூறியுள்ளார். இது போன்று மற்ற மாநிலங்களிலும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடர்ந்தால் பலர் குற்றங்கள் செய்வதற்கு பயம் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Source: Times Of India

Image Courtesy: India Blooms

Next Story
கதிர் தொகுப்பு
Trending News