சட்ட விரோதமாக கைமாறும் வெளிநாட்டு பணம் என்ன ஆகிறது? 'அம்னெஸ்டி' இந்தியாவுக்கு ரூ.51 கோடி அபராதம்!

By : Kathir Webdesk
நாட்டின் அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அம்னஸ்டி இந்தியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆகர் படேல் மீது அமலாக்க இயக்குநரகம் அபராதம் விதித்துள்ளது.
அன்னிய செலாவணி தடை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், அம்னெஸ்டி இந்தியா நிறுவனத்திற்கு, 51.20 கோடி; அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆகர் படேலுக்கு, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, வெளிநாட்டு பங்களிப்புகளை, வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) என்ற பெயரில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அன்னியச் செலாவணி விதிகளை மீறியதாக இந்த என்ஜிஓ மீது வழக்குப் பதிவு செய்தது. நவம்பர் 2013 மற்றும் ஜூன் 2018 க்கு இடையில் அம்னெஸ்டி மூலம் பெறப்பட்ட நிதி, வெளிநாட்டு பயனாளிகளுக்கு சேவைகளை ஏற்றுமதி செய்வதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அதன் அறிவிக்கப்பட்ட வணிகத்திற்கு பொருந்தாத பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Input from: Hindustan Times
