Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர்ந்து 5வது நாள்.. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ்..

தொடர்ந்து 5வது நாள்.. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ்..

தொடர்ந்து 5வது நாள்.. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ்..
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2020 4:58 PM IST

தொடர்ந்து 5வது நாளாக, புதிதாக கொவிட் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டவில்லை. கடந்த 24 மணி நேரத்தில், 47,905 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை, புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட தொடர்ந்து 40வது நாளாக அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52,718 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டின் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,89,294 ஆக உள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் குணமடைந்தோர் வீதம் 92.89%மாக உள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,66,501 ஆக உள்ளது.

குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்கும் உள்ள இடைவெளி 75,77,207 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 550 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு வீதம் 1.48%-ஆக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News