ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க 16 விமான நிலையங்கள் - 2014ஆம் ஆண்டுக்கு பிறகு எட்டப்பட்ட அபார வளர்ச்சி!
6 routes expanding aerial connectivity in North East India
By : Muruganandham
கடந்த 2014ஆம் ஆண்டு வடகிழக்குப் பகுதியில் 6 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. உடான் திட்டத்தின் கீழ் 7 ஆண்டு குறுகிய காலத்தில் 15 விமான நிலையங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இத்துடன் கிருஷி உடான் திட்டத்தின் கீழ், இப்பகுதியில் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க 16 விமான நிலையங்களை அடையாளம் கண்டுள்ளோம். இதன் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என மத்திய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.
வடகிழக்கு இந்தியாவில் விமான தொடர்பு விரிவாக்கத்திற்கான 6 வழித்தடங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த போது இது குறித்து பேசியுள்ளார். கொல்கத்தா- குவஹாத்தி- ஐசால், ஐசால் – ஷில்லாங், ஷில்லாங் – ஐசால், ஐசால் – குவஹாத்தி, குவஹாத்தி – கொல்கத்தா ஆகிய வழித்தடங்களில் விமானப் போக்குவரத்து தொடங்கியது.
கிருஷி உடான்
விவசாய விளைச்சலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கிருஷி உடான் திட்டம் (Krishi Udan scheme) விமான போக்குவரத்து அமைச்சகத்தால் தொடங்கப்பபட்டது. இது விவசாய பொருட்களை வெளி நாடுகளுக்கு எடுத்து சென்று அதை விற்பனை செய்ய பெரிதும் உதவும். இதே போல 2021-ம் ஆண்டுக்கான விவசாயக் கடன் தொகை 15 லட்சம் கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முன்னர் 12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.