6.40% எட்டும் இந்திய பொருளாதார வளர்ச்சி; உலக வங்கி அறிக்கை!
By : Sushmitha
அதிகரித்து வரும் முதலீடு மற்றும் உள்நாட்டு தேவை ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி 2024 - 2025 நிதியாண்டில் 6.40 சதவீதமாக உயரும் என உலக வங்கி அறிவித்துள்ளது.
உலகப் பொருளாதார சூழ்நிலை என்பது சவாலான சூழலாக இருந்து வருகிற சமயத்திலும் இந்தியா தொடர்ந்து பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது மற்ற வளரும் பொருளாதாரத்தை விட வலுவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு 6.30 சதவிகிதமாக நடப்பு நிதியா ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கக் கூடிய நிலையில் 6.40 சதவிகிதமாக 2024 - 2025 நிதியாண்டில் உயரும் என்றும் உலகப் பொருளாதாரத்தில் தெற்காசியா பொருளாதாரம் ஒரு பிரகாசமாக ஒளிர்ந்து வருகிறது இதனால் இனிவரும் அடுத்த சில ஆண்டுகளில் மற்ற நாடுகளின் பிராந்தியத்தை விட இப்பகுதி அதிகமாக வளரும்.
அரசின் நடவடிக்கைகளால் முக்கியமான பொருள்களின் வரத்து என்பது அதிகரித்து வருகிறது அதோடு உணவு பொருள்களின் விலையும் குறைய தொடங்கியுள்ளது இதன் மூலம் இனி வரும் காலங்களில் இந்தியாவின் பண வீக்கம் குறையும், ஏற்றுமதி குறைந்தாலும் அதை ஈடு செய்யும் வகையில் சேவை துறையில் ஏற்றுமதி அமைவதோடு இந்திய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்கள் அனைத்தும் கட்டுமான துறையில் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source - Dinamalar