Kathir News
Begin typing your search above and press return to search.

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்தவ மதபோதகர் கைது!

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்தவ மதபோதகர் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  27 March 2022 10:28 AM GMT

கேரளாவில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்தவ மதபோதகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக பினராய் விஜயன் உள்ளார். அங்கு அடிக்கடி மதபோதகர்கள் பெண்களிடம் அத்துமீறும் சம்பவம் நடைபெற்று வருவது வாடிக்கையாகிவிட்டது.


அதே போன்று தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. காயங்குளம் அருகே உள்ள கட்டானம் பகுதியை சேர்ந்தவர் இடிகுலா தம்பி, இவர் கிறிஸ்தவ மதபோதகராக உள்ளார். இவர் வீட்டின் அருகாமையில் வசித்து வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவே போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து மதபோதகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Source: Dinamalar

Image Courtesy: Safe Child

Next Story
கதிர் தொகுப்பு
Trending News