Kathir News
Begin typing your search above and press return to search.

7 ஆண்டுகளில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தால் நடந்த மாற்றம்: இதுவரை வரலாற்றில் நடக்காத சாதனை!

7 ஆண்டுகளில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தால் நடந்த மாற்றம்: இதுவரை வரலாற்றில் நடக்காத சாதனை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 April 2023 2:46 AM GMT

பொருளாதார ரீதியில் அதிகாரமளித்தல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை கவனத்தில் கொண்டு தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் 2016ல் தொடங்கப்பட்டது.

ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் சந்திக்கும் பல்வேறு சவால்களை கருத்தில் கொண்டு அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வகையில் உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறைகள் மற்றும் வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில் ஊக்குவிக்கும் வகையில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.

அப்போது நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் ஷெட்யூல்டு, பழங்குடியின தொழில்முனைவோருக்கு ரூ.40,600 கோடிக்கும் அதிகமாக கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு பெருமையும், திருப்தியும் அளிக்கிறது என்று கூறினார்.

ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் 7-ம் ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிரிடையே தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் ஒரு முக்கிய மைல்கல் என்பதை நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம், சேவை கிடைக்கப்பெறாத, பின்தங்கிய தொழில்முனைவோருக்கு உகந்தவகையில், கடன் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பல்வேறு தரப்பினரை சென்றடைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தத் திட்டம் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு அவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான ஆதரவை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் 1.8 லட்சத்திற்கும் மேலான தொழில்முனைவோர் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர் என்றும் டாக்டர் காரத் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறினார்.

Input From: OutLook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News