700 ஆண்டு பழமையான வேலூர் ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு!
வேலூர் மாவட்டத்தில் இருந்து காணாமல் போன 700 ஆண்டு பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டிருப்பதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கூறியுள்ளார்.
By : Thangavelu
வேலூர் மாவட்டத்தில் இருந்து காணாமல் போன 700 ஆண்டு பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டிருப்பதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கூறியுள்ளார்.
பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு மோடி பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடம் ரேடியோ மூலம் ஒளிபரப்பாகும் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
#Justin: வேலூரில் காணாமல் போன 700 வருட பழமையான ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
— Thanthi TV (@ThanthiTV) February 27, 2022
* இத்தகைய சிலைகள் இந்திய சிற்ப கலையின் திறமைக்குச் சான்றாகும்> இந்திய மண்ணுக்கு மீட்டு வருவது நமது பொறுப்பு - பிரதமர் #PmModi pic.twitter.com/oW3K8ln2Dh
அதே போன்று இந்த மாத்திற்கான உரையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இதில் பல்வேறு தகவல்களை நாட்டு மக்களிடம் பகிர்ந்தார். அதன்படி வேலூரில் இருந்து காணாமல் போன 700 ஆண்டு மிகவும் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டிருப்பதாக கூறினார். இத்தகைய சிலைகள் இந்திய சிற்ப கலையின் திறமைக்குச் சான்றாகும். இந்திய மண்ணுக்கு மீட்டு கொண்டு வருவது நமது பொறுப்பாகும். இவ்வாறு அவர் தனது உரையில் கூறியிருந்தார்.
Source, Image Courtesy: Twiter