Begin typing your search above and press return to search.
73வது ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி.. நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.!
73வது ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி.. நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.!

By : Kathir Webdesk
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலமாக இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாள் முதல் மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியானது மாதத்திற்கு கடைசி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதே போன்று இன்று 73வது முறையாக உரையாற்றுகிறார். இந்த உரையில் தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா பிரச்சனை மற்றும் அதற்கு போடப்படும் தடுப்பூசி குறித்து எடுத்துரைப்பார். மேலும், வேளாண் சட்டத்தால் என்ன மாதிரியான நன்மைகள் உள்ளன மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை அகில இந்திய வானொலி, மோடி ஆப் மூலம் மட்டுமின்றி தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
