Begin typing your search above and press return to search.
74 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்த மத்திய அரசு.. விரைவில் மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும்.!
பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசியை மத்திய அரசே விநியோகம் செய்யும் என்று சமீபத்தில் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

By : Thangavelu
பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசியை மத்திய அரசே விநியோகம் செய்யும் என்று சமீபத்தில் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், மாநில அரசுகளுக்கு விநியோகிக்க மேலும் 74 கோடி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி விநியோகம் நடைபெறும் என கூறப்படுகிறது.
பிரதமர் மோடி அறிவிப்பைத் தொடர்ந்து, புதிதாக 44 கோடி கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் டோஸ்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது மட்டுமின்றி தற்போது பரிசோதனை முடியும் தருவாயில் உள்ள பயலாஜிக்கல் இ தடுப்பூசிகளை 30 கோடி எண்ணிக்கையில் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.
Next Story