ரூ.7,406 கோடியில் சென்னை, பெங்களூருவுக்கு அதிவிரைவு சாலை: NHAI தகவல்!
By : Thangavelu
சென்னை, பெங்களூரு இடையில் 3,447 கோடி மதிப்பீட்டில் அதிவிரைவு சாலை அமைப்பதற்கான வேலைகள் தற்போது துவக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான மண் பரிசோதனைகளும் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்து, கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு வரைக்கும் ஏற்கனவே தங்க நாற்கர சாலை இருக்கின்றது. இருந்தாலும் இந்த சாலை வழியாக செல்வதற்கு குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது. இதனால் பயணம் நேரம் அதிகரிப்பதை குறைப்பதற்காக மத்திய அரசு புதிய வழியை கண்டுப்பிடித்துள்ளது.
அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கோவிந்தவாடி, ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக பெங்களூருவுக்கு அதிவிரைவு சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான நில அளவிடும் பணிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 264 கி.மீ. தூரத்திற்கு இந்த சாலை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாலை அமைப்பதற்காக 7406 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 3477 கோடி ரூபாய் கட்டுமான பணிக்காகவும், 3929 கோடி நிலம் எடுப்பதற்காகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சாலை வருகின்ற 2024ம் ஆண்டுக்குள் முடிவடையும் என கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Dinamalar