இந்திய பெருமையின் அடையாளம் பிரமோஸ் ஏவுகணை - பிரதமர் பெருமிதம்!
இந்தியா பெருமையின் அடையாளமாக பிரமோஸ் ஏவுகணை திகழ்கிறது பிரதமர் பெருமிதம்.
By : Bharathi Latha
இந்திய திரு நாட்டில் தற்போது 75 ஆவது சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மேலும் இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக செங்கோட்டையில் பிரதமர் மோடி அவர்கள் காலையில் முப்படைகள் மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 7 முப்பது மணி அளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி நாட்டின் பெருமித உரையை வழங்கினார். இந்திக்கு வரலாறு சுமார் 75 ஆண்டுகள் பயணம் செய்து தற்போது 76 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிடுகையில், 300க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படாமல் நாமே சொந்தமாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட நிலைமையை இருக்கிறோம் என்றால் சுயசார்பு என்பது நம்மிடம் முழுமையாக உள்ளது. சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் மூலம் மக்கள் அனைவரும் தற்போது அடுத்த ஒரு நிலையை எட்டி உள்ளார்கள் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் மிக முக்கியமான மாற்றங்கள் வர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இனிமேல் பிற நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவது குறைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் இனி சில காலங்களிலேயே நாம் முழுமையாக நம்மை நாமே சார்ந்திருக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு உதாரணமாக தற்போது பிரமோஸ் ஏவுகணை என்பது இந்திய நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியர் உடைய பெருமையின் அடையாளம். எனவே நாம் நமக்கே உருவாக்கிய ஒரு ஏவுகணை தான். அனைவரும் ஒன்றுபட்டு சுதந்திரத்தின் முழுமையான அனுபவத்தை கடைக்கோடியில் உள்ள மனிதனுக்கும் கொண்டுபய் சேர்க்க வேண்டும் என்பதை அரசாங்கத்தில் முக்கிய நோக்கமாக உள்ளது.
Input & Image courtesy: News7