Kathir News
Begin typing your search above and press return to search.

8 ஆக்ஸிஜன் ஆலை அமைக்க பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தொகையை, வீணடித்த டெல்லி அரசு!

8 ஆக்ஸிஜன் ஆலை அமைக்க பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தொகையை, வீணடித்த டெல்லி அரசு!
X

MuruganandhamBy : Muruganandham

  |  27 April 2021 7:00 AM IST

மக்களின் தேவைக்கான கெஜ்ரிவால் ஆக்சிஜன் ஆலைக்கு ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை என்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் குற்றம் சாட்டி உள்ளார்.

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைக்காத நிலையில், உயிரிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா நோயாளிகளின் உயர்காக்க அளிக்கப்படும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதுதொடர்பாக டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் கெஜ்ரிவால் அரசை கடுமையாக சாடியுள்ளார். லைநகரில் ஆக்ஸிஜன் சேமிப்பு திறனை அதிகரிக்கவும், புதிய ஆலைகளை அமைக்கவும் கடந்த ஒரு வருடத்தில் எதுவுமே செய்யவில்லை என்று தெரிவித்து உள்ளார்.,

மேலும், டெல்லியில் 8ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க , பிஎம் கேர்ஸ் (PM CARES) நிதியிலிருந்து மத்தியஅரசு பணம் ஒதுக்கிய நிலையில், ஒரே ஒரு ஆலையை மட்டுமே கெஜ்ரிவால் அரிசு அமைத்துள்ளது. மேலும் ஆக்ஸிஜன் சேமிப்பு திறனையும் அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

ஆனால்ர, ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் கடந்த ஒரு வருடத்தில் அனுமதிக்கப்பட்ட 37 ஆலைகளில் 7 பெரிய ஆக்ஸிஜன் சேமிப்பு ஆலைகள் உள்பட 24 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைத்துள்ள என்றும், ஆனால், டெல்லி அதற்கான முயற்சியை எடுக்க தவறி விட்டது என்று கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News