8 ஆண்டு கால உளர்ச்சியை பட்டியலிட்டு பிரதமர் மோடி பெருமிதம்!
By : Thangavelu
பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு சீர்த்திருத்தங்களால் நாட்டில் வர்த்தகம் செய்வது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும், வளர்ச்சியின் வேகத்திற்கு தடையாக இருந்த வழக்கற்ற சட்டங்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை பிரதமர் மோடி பகிர்ந்து சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், எளிதாக வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய சீர்த்திருங்கள் நடைபெற்றுள்ளது.
மேலும், சீர்த்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்கின்ற கோட்பாட்டை மத்திய அரசு பின்பற்றி, எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை மேம்படுத்தும் ஏராளமான சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க நிலை தொழில் நிறுவனங்கள் இருப்பதாகவும், 100 நிறுவனங்கள் 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட யூனிகார்ன் என்ற அந்தஸ்தை எட்டியிருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இதுவரையில் இல்லாத வகையில் 2021, 22ம் ஆண்டில் 83 பில்லியன் அன்னிய முதலீடு பெற்றதாக கூறியுள்ளார். உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Polimer