8 ஆண்டுகளில் மீன்வளத்துறைக்காக ரூ.32,500 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசின் சாதனைகளை அடுக்கும் அமைச்சர் எல்.முருகன்!
By : Kathir Webdesk
கடந்த 8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014ல் இருந்து இதுவரை மீன்வளத்துறைக்காக ரூ.32,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவிட் பெருந்தொற்று காலகட்டத்திலும்கூட மீன் சார்ந்த ஏற்றுமதி 32 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. மனிதர்களுக்கு இருப்பது போன்றே கால்நடைகளுக்கும் அவசர ஊர்திகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது.
அதன் பயனாக தற்போது நாட்டில் 4,332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 அவரச ஊர்திகள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு உள்ளன என்று தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் முருகன் தெரிவித்தார்.
சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டு உள்ளன.
ஜன்தன் இயக்கத்தின் மூலம் பெரும்பான்மை மகளிர் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளினால் பெண்கள் இப்பொழுது சமூகப் பாதுகாப்போடும் கௌரவமாகவும் வாழ முடிகிறது. 2047ஆம் ஆண்டு இந்தியாவை முழு வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதே நமது இலக்கு என்று டாக்டர் எல்.முருகன் மேலும் தெரிவித்தார்.
Input From: NewsonAIr