அடாவடி மற்றும் கணக்குகளை காட்டாத 87 கட்சிகள் நீக்கம் - சாட்டையை சுழற்றிய தேர்தல் கமிஷன்!
By : Thangavelu
தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகளை அதிரடியாக இந்தியத் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. வரிக்கணக்கு சரியாக தாக்கல் செய்யப்படவில்லை, முகவரியை புதுப்பிக்காதது என்று இப்படி காணாமல் போன 87 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் ஒவ்வொருவரும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி 2,796 பதிவு செய்யப்பட்ட, அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் உள்ளது. இவை கடந்த 2001ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 300 சதவீத அதிகமாகும். ஆனால் வெறும் பெயரளவிற்கு மட்டும் கட்சியை ஆரம்பித்துவிட்டு, வருமான வரிச்சலுகை பல்வேறு சலுகைகளை சிலர் மறைமுகமாக பெற்று வருகின்றனர்.
மேலும், தங்களின் கட்சியின் பெயரை காட்டி பல மோசடிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவேதான் தேர்தல் ஆணையம் அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தலில் போட்டியிடாத மற்றும் முறையாக கணக்குகள் தாக்கல் செய்யாத கட்சிகளின் பெயர்களை நீக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அடாவடி தனத்தில் ஈடுபட்டு வந்த பல்வேறு கட்சிகள் நடுங்கி போயுள்ளது.
எனவே தேர்தல் ஆணையம் சொல்லியிருந்தபடியே ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 2,100 பதிவு செய்யப்பட்ட அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பற்றிய ஆய்வுகளை தொடங்கிய நிலையில் 87 கட்சிகள் சிக்கியுள்ளது. இவை அனைத்தும் எந்த ஒரு ஆவணங்களை பதிவு செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவேதான் அவர்களின் பெயர்களை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: One India Tamil