விவசாயிகளுடன் இன்று நடந்த 8ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி.!
விவசாயிகளுடன் இன்று நடந்த 8ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி.!

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற 8 வது கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு விவசாயிகளிடம் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது என பாஜக குற்றம்சாட்டி வந்தது.
இதனிடையே விவசாய பிரதிநிதிகளிடம் மத்திய அரசு கடந்த 7 முறை பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், இன்று டெல்லியில் 8ம் கட்டமாக விவசாய அமைப்புகளிடம் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பபெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால் இன்றும் விவசாய அமைப்புகளிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே மீண்டும் வருகின்ற 15ம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.