Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்துக்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களின் தொகுப்பு.!

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்துக்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களின் தொகுப்பு.!

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்துக்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களின் தொகுப்பு.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Nov 2020 6:30 AM GMT

வருடம் முழுவதும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் தொடர்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்துக்களுக்கு எதிராக நடந்த நிகழ்வுகளின் பட்டியல் நீள்கிறது. ஆனால் இவற்றைப் பதிவிடுவது முக்கியம். 'மதசார்பற்ற' ஊடகங்கள் இவற்றை பொதுவான தலைப்புகளின் கீழ் புதைத்து விடுகின்றன.

குறிப்பாக பல இஸ்லாமியவாதிகள்,தங்கள் மதத்தை பெரியதாக கருதி, இந்துக்களையும், இந்து மதத்தை சார்ந்தவர்களையும் எல்லா விதத்திலும் துன்புறுத்துகிறார்கள். இஸ்லாமிய ஆதிக்கத்தை அவர்கள் தொடர்ச்சியாக நிலைநாட்டகின்றார்கள். இந்தியாவிலும் மற்ற பல நாடுகளிலும் இந்து மக்களை குறிவைத்து பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவற்றைப் பற்றிய தொகுப்பு இதோ,

முதலாவதாக உ.பி.யின் ஸ்ராவஸ்தி மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவம். இந்த சம்பவத்தில் தலித் மக்களின் கிராம தலைவரின் 12 வயது மகனை அதே கிராமத்தில் புலம்பெயர்ந்து தொழிலாளியான கலீம் என்பவர் கடத்தி கொலை செய்து உள்ளார். இந்த சம்பவத்தில் காசிமின் பெற்றோர்களான ஹாசன் மற்றும் ஆயிஷா ஆகியோரும் மேலும் இவர்களுடைய உறவினர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பது இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு வெளிவந்தது. மேலும் கலீம் இடமிருந்து கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் போன்றவற்றை போலீசார் மீட்டுள்ளனர். எனவே இக்கொலையில் இந்து மதத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளான்.

அடுத்த சம்பவம் உ.பி யில் உள்ள ஃபிரோசாபாத்தில், ஒரு இந்து இளைஞர் ஒரு முஸ்லீம் கும்பலால் கொலை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், அந்த பகுதியை சேர்ந்த மக்களை 15 - 20 இஸ்லாமியவாதிகள் கும்பலாக சேர்ந்த அனைவரும் தங்களுக்கு கீழ் அடங்கி தாங்கள் சொல்வதை கேட்டு இருக்க வேண்டும் என்று அச்சுறுத்தி உள்ளார்கள். மேலும் அவர்களை மிரட்டுவதற்காக பெட்ரோல் குண்டுகளை வீசியும் துப்பாக்கி குண்டுகளை வெடித்து மக்களை பயத்தை வைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இஸ்லாமிய கும்பல் முயற்சி செய்துள்ளார்கள்.

அடுத்தது நொய்டாவில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு வெளியே கமல் சர்மா என்பவர் யூடியூபர் நிஜாமுல் கான் என்ற முஸ்லிமால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏன் கொலை செய்தார் என்றால், நிஜாம்கான் தன்னுடைய சகோதரியை சந்திக்கக்கூடாது என்று வர்மா கூறியதற்காக இந்தக் கொலையைச் செய்துள்ளார். இதே மாதிரியான மதவெறி கொலை தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ஒருவர் பைபிளின் வசனங்கள் மற்றும் அதன் வேதங்களை இழிவுபடுத்தியதற்காக என்று கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதைப்போன்று, பங்களாதேஷின் கொமிலா மாவட்டத்தின் கோர்பன்பூர்கிராமத்தில் இந்துக்கள் ஒருவரின் வீடுகளை இஸ்லாமிய கும்பல் தாக்கியது. ஏன் என்ற காரணத்தை ஆராயும் பொழுது, அந்த இந்து தனது பேஸ்புக் பதிவில் பிரான்சுக்கு ஒற்றுமையை தெரிவித்தாராம்.அதற்காக ஒரு இந்துவின் கிராமத்தையே எரிக்கும் அளவிற்கு இஸ்லாமியர்கள் சென்றுள்ளார்கள்.

இதைப்போன்றே ஜெகன்னாத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு இந்து மதம் மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இந்து மாணவர், இஸ்லாமுக்கு எதிராக பேஸ்புக்கில் இறை நிந்தனை(blasphemy) செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளார். அவரைப் பிறகு காணவில்லை.

அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பழமை வாய்ந்த இந்து மத கோவில் முஸ்லிம்களால் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம்களால் தகர்க்கப்பட்ட மூன்றாவது இந்து கோயில் இதுவாகும். அடுத்த சம்பவம் என்னவென்றால், 13 வயதான சோனியா குமாரி என்ற இந்து மதத்தை சேர்ந்த சிறுமி பாகிஸ்தானின் சிந்து மாநிலமான காஷ்மோர் மாவட்டத்தில் உள்ள பர்ச்சுண்டி ஷெரீப்பின் சூஃபி என்ற ஆலயத்தில் வலுக்கட்டாயமாக இந்து மதத்தில் இருந்து மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தற்போது ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்காளம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் நவம்பர் மாதத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளது. எனவே இந்து பண்டிகைகளுக்கு மட்டுமே இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒருதலைபட்சமாக இந்துக்களின் பண்டிகைகளுக்கு தடை விதிப்பதாக தெரிகிறது.

எனவே மத போதனைகள், அறிவுரைகள் எதுவாக இருந்தாலும் இந்து மதத்திற்கு மட்டுமே அது கட்டாயமாக பாதிக்கப்படுவதாகவும், மற்ற மதங்களுக்கு ஏன் இதை கட்டாயமாகக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. எனவே கடந்த வாரத்தில் ஒரு மட்டும் இத்தகைய கொலைகள், மத மாற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் அரங்கேறியுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News