Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா: திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார்!

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிரவம் என்ற ஊரில் கடந்த 1946ம் ஆண்டு கொச்சான், பொலியாள் தம்பதிக்கு 12வது மகனாக பிறந்தார் சிவானந்தர். இவர் சிறுவயதில் இருந்தே திருக்குறள் மீதும், திருவள்ளூவர் மீது ஈடுபாடு கொண்டவர் ஆவார். இவர் வாழ்வியல் நெறிகளை மக்களிடம் எடுத்துக் சொல்வதை தனது முழுநேர பணியாக செய்து வந்தார்.

கேரளா: திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார்!
X

ThangaveluBy : Thangavelu

  |  10 Aug 2021 1:00 PM GMT

திருவள்ளூவர் மீது மிகுந்த பற்றுக்கொண்ட காரணத்தினால் கேராவில் திருவள்ளூவர் ஞானமடம் எனும் வாழ்வியல் நெறி அமைப்பை நிறுவிய சிவானந்தர் நேற்று இரவு உயிரிழந்தார்.

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிரவம் என்ற ஊரில் கடந்த 1946ம் ஆண்டு கொச்சான், பொலியாள் தம்பதிக்கு 12வது மகனாக பிறந்தார் சிவானந்தர்.இவர் சிறுவயதில் இருந்தே திருக்குறள் மீதும், திருவள்ளூவர் மீது ஈடுபாடு கொண்டவர் ஆவார். இவர் வாழ்வியல் நெறிகளை மக்களிடம் எடுத்துக் சொல்வதை தனது முழுநேர பணியாக செய்து வந்தார்.

இவரை போன்று அவரது துணைவியார் சரஸ்வதி அம்மையாரும் திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து பகவான் ஆதி திருவள்ளூவர் ஞானமடம் எனும் பெயரில் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் மடத்தின் கிளைகளை தொடங்கி மக்களுக்கு திருக்குறள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர்.

இவர் மூலம் கேரளா மாநிலத்தில் பலரும் திருக்குறள் குறித்தும் திருவள்ளூவர் குறித்தும் தெரிந்து கொண்டனர். இவர் திருக்குறளை மலையாள மக்களிடம் கொண்டு சென்ற பெருமை சிவானந்தரை சேரும்.

இந்நிலையில், சிவானந்தர், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (09.08.2021) காலமானார். அவரது மறைவு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: News 7

Image Courtesy:The Hindu

https://news7tamil.live/a-man-who-spread-thirukkural-in-kerala-died.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News